திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவருமான சொ.சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்க பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கான காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதி உடைய வி்ண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது.
அதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு திருப்பூர் பல்லடம் ரோட்டில் சின்னகரை பகுதியில் உள்ள பார்க் கல்லூரியில் விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 15-ந்தேதி முதல் 21-ந் தேதி வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 22-ந் தேதியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டினை திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் (www.drbtiruppur.net) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட இரண்டு நகல்கள், இரண்டு பாஸ்–போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது உள்ளிட்ட சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 0421-2971173 மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவு