தலையில் பை சுற்றப்பட்டு இறந்து கிடந்த பிரித்தானிய கணவன்: மனைவியின் செயலில் தொடரும் மர்மம்

கம்போடியாவில் வசித்து வரும் பிரித்தானிய கணவர் ஒருவரின் தலையில் கருப்பு பை சுற்றப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கணவர் மரணம்

நியூகேசிலை சேர்ந்த ஜொனாதன் ஸ்டாக்(34) என்ற பிரித்தானிய தந்தை கம்போடியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவருக்கு மீலிங்(39) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் புதன்கிழமை கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது தனது இரண்டு குழந்தைகளையும் மனைவி மீலிங் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார்.

தலையில் பை சுற்றப்பட்டு இறந்து கிடந்த பிரித்தானிய கணவன்: மனைவியின் செயலில் தொடரும் மர்மம் | Britain Dad Dies Mysteriously In CambodiaJonathan Stock&wife Meiling – ஜொனாதன் ஸ்டாக்&மனைவி மீலிங்(ViralPress)

மூன்று மணி நேரம் கழித்து அவள் திரும்பி வந்து பார்த்தபோது, வாசலில் ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் தலையில் சுற்றப்பட்ட நிலையில் தன் கணவர் இறந்து கிடப்பதைக் கண்டார்.

பொலிஸார் விசாரணை

கணவர் இறந்து கிடப்பதை பார்த்த மீலிங், உடனடியாக தனது தாயையும் சகோதரரையும் உதவிக்கு அழைத்ததாகவும், அதன் பிறகு காவல்துறையை தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.  

தற்கொலை என முதலில் முடிவு செய்யப்பட்டாலும், பொலிஸார் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர். 

தலையில் பை சுற்றப்பட்டு இறந்து கிடந்த பிரித்தானிய கணவன்: மனைவியின் செயலில் தொடரும் மர்மம் | Britain Dad Dies Mysteriously In CambodiaJonathan Stock&wife Meiling – ஜொனாதன் ஸ்டாக்&மனைவி மீலிங்(ViralPress)

தலைமை காவலர் லிம் புத்திலா தெரிவித்த தகவலில், இந்த வழக்கை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்கள் புலனாய்வாளர்கள் இறந்தவரை அறிந்த மற்ற நபர்களிடம் விசாரணை நடத்துவார்கள், மரணத்திற்கான உண்மையான காரணத்தை நாங்கள் கண்டுபிடிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

மனைவி மீது எழும் சந்தேகம்

உள்ளூர் ஊடகங்கள்,  ஜொனாதன் ஸ்டாக் உயிரிழந்தது தொடர்பாக மனைவி மீலிங்கின் காவல்துறையிடம் தெரிவித்த தகவலிலும், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவலிலும் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மீலிங் காவல்துறையிடம் காலையில் கணவர் “தூங்கிக் கொண்டு இருக்கிறார்” என்று தெரிவித்து இருந்த நிலையில், பத்திரிகையாளரிடம் ஜொனாதன் ஸ்டாக் உயிரிழப்பதற்கு முன் காலையில் “காலை உணவை சமைத்துக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார்.

தலையில் பை சுற்றப்பட்டு இறந்து கிடந்த பிரித்தானிய கணவன்: மனைவியின் செயலில் தொடரும் மர்மம் | Britain Dad Dies Mysteriously In CambodiaJonathan Stock&wife Meiling – ஜொனாதன் ஸ்டாக்&மனைவி மீலிங்(ViralPress)

அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலில், ஜொனாதன் ஸ்டாக் மற்றும் மீலிங் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என்றும், அவர் இறப்பதற்கு முந்தைய இரவு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜொனாதன் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக புனோம் பென்னில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

தலையில் பை சுற்றப்பட்டு இறந்து கிடந்த பிரித்தானிய கணவன்: மனைவியின் செயலில் தொடரும் மர்மம் | Britain Dad Dies Mysteriously In CambodiaJonathan Stock&wife Meiling – ஜொனாதன் ஸ்டாக்&மனைவி மீலிங்(ViralPress)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.