வாஷிங்டன்,சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலை புதுப்பித்துள்ள அமெரிக்கா, அல் குவைதா மற்றும் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த நான்கு பேரை புதிதாக பட்டியலில் சேர்த்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் டோனி பிளிங்கென் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது அல் குவைதா இயக்கத்தைச் சேர்ந்த ஒசாமா மெஹ்மூத், முஹமது மரூப், அதிப் யாஹ்யா கோவுரி மற்றும் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த அமீர்காரி அம்ஜத் ஆகிய நான்கு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேருக்கும், அமெரிக்க அதிகார வரம்புக்கு உட்பட்ட இடங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்படும். இவர்களுடன் அமெரிக்க குடிமக்கள் யாரும் பரிவர்த்தனை வைத்துக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் சர்வதேச பயங்கரவாதிகளின் செயல்பாட்டை முற்றிலும் ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement