அமெரிக்கா இல்லாமல்…ஐரோப்பாவிற்கு பலம் இல்லை: பின்லாந்து பிரதமர் பகீர் கருத்து


உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அளவுக்கு ஐரோப்பாவிற்கு பலம் இல்லை என பின்லாந்தின் இளம் பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார்.


ஐரோப்பாவிற்கு பலம் இல்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள லோவி இன்ஸ்டிடியூட் திங்க் டேங்கில் வெள்ளியன்று பின்லாந்து பிரதமர் சன்னா மரின்  பேசினார்.

அப்போது நான் உங்களிடம் மிகவும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பேச தொடங்கிய மரின், ஐரோப்பா இப்போது போதுமான அளவு பலமாக இல்லை, “அமெரிக்கா இல்லாமல் நாம் சிக்கலில் தான் இருப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இல்லாமல்…ஐரோப்பாவிற்கு பலம் இல்லை: பின்லாந்து பிரதமர் பகீர் கருத்து | Europe Would Be In Trouble Without Us FinlandFinnish PM Sanna Marin- பின்லாந்து பிரதமர் சன்னா மரின்(EPA-EFE/REX/SHUTTERSTOCK)

அத்துடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஐரோப்பாவிற்கு பலம் இல்லை என்றும், ஐரோப்பா அமெரிக்காவின் ஆதரவை நம்பியிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் “ஐரோப்பிய பாதுகாப்பு, ஐரோப்பிய பாதுகாப்புத் துறையில் திறன்களை உருவாக்குவது மற்றும் பல்வேறு வகையான சூழ்நிலைகளை நாம் சமாளிக்க முடியும் என்பதை உறுதிசெய்வது”  போன்ற கூறுகளை ஐரோப்பா உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.


அமெரிக்காவின் இராணுவ உதவி

ஐரோப்பிய பாதுகாப்பு துறையை பலத்த வேண்டும் என்று பேசிய பின்லாந்து பிரதமர் சன்னா மரின், உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் உக்ரைனுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை வழங்குவது அமெரிக்கா தான்.

அமெரிக்கா இல்லாமல்…ஐரோப்பாவிற்கு பலம் இல்லை: பின்லாந்து பிரதமர் பகீர் கருத்து | Europe Would Be In Trouble Without Us FinlandBBC

பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா $18.6 பில்லியன் தொகையை கொடுத்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக ஐரோப்பிய ஒன்றியம் அதிக உதவிகளை வழங்கியுள்ளது, மூன்றாவதாக பிரித்தானியா உள்ளது.

இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்காவின் பங்களிப்புடன் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பை ஒப்பிட்டால் மிக குறைவானது என்றும் சன்னா மரின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இல்லாமல்…ஐரோப்பாவிற்கு பலம் இல்லை: பின்லாந்து பிரதமர் பகீர் கருத்து | Europe Would Be In Trouble Without Us FinlandEU&US-ஐரோப்பா&அமெரிக்க

மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைவதற்காக பின்லாந்து காத்து இருக்கும் இந்த நேரத்தில் அந்த நாட்டு பிரதமர் சன்னா மரின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.