பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் பாண்டி கோவில் அருகே அமைந்துள்ள கலைஞர் திடலில் மதுரை மாநகர் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அங்கு 1,200 கிரிக்கெட் அணிையச் சேர்ந்த 13 ஆயிரத்து 200 வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் அவர் பேசியதாவது:-

“கட்சியில் இளைஞர் அணி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு நான் மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினேன்.
அந்த நிகழ்ச்சியை அவர் ஒரு மாநாடு போல் நடத்தினார். அதன் பின்னர் தற்போது பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்னேன்.
ஆனால், இந்த நிகழ்ச்சியை மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு மாபெரும் மாநாடு போல் நடத்தி இருக்கிறார்.
இதன் மூலம், தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொன்றாக பார்த்து பல திட்டங்களை செய்து வருகிறார்” என்று அவர் பேசியுள்ளார்.
அதன் பின்னர் அமைச்சர் மூர்த்தி பேசியதில் தெரிவித்ததாவது, “தமிழக அரசியலில் இளைஞர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார். மேலும், மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.