சென்னை விமான நிலையத்தில் சிகரெட் பாக்கெட்டில் மறைத்து கடத்தி வந்த ரூபாய் 21.20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு சோதனைகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவரது உடமைகளை சோதனை செய்ததில் 35 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்துள்ளது. இதனைப் பிரித்துப் பார்த்ததில் அந்த சிகரெட் பாக்கெட் களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வாலிபரிடம் இந்த கடத்தல் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.