உலக கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட பிரேசில் அணியை கேமரூன் அணி 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
பிரேசில்-கேமரூன் மோதல்
கத்தாரின் லுசைல் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் ஜி-யில் உள்ள பிரேசில் மற்றும் கேமரூன் அணிகள் மோதின.
உற்சாகமான ரசிகர்கள் பட்டாளத்திற்கு மத்தியில் களமிறங்கிய பிரேசில் அணி, ஒவ்வொரு முறை பந்தை கோலுக்காக கொண்டு செல்லும் போது ரசிகர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர்.
fifa.com
ஆனால் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேமரூன் மற்றும் பிரேசில் அணி வீரர்கள் அடுத்தடுத்து பிழைகளை செய்து மஞ்சள் அட்டை பெற்றனர்.
முதல் பாதி முடிவில் இரண்டு அணிகளும் சரிசமாக போட்டி போட்டு கொண்டதால், கோல் எதுவும் போடப்படாமல் 0-0 என்ற நிலையில் முதல் பாதி நிறைவடைந்தது.
கேமரூன் அபார வெற்றி
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இரண்டாம் பாதியில் களமிறங்கிய இரண்டு அணிகளும் வெற்றியை வசமாக்கி கொள்ளும் முனைப்புடன் தீவிரமான விளையாட்டை வெளிப்படுத்தினர்.
fifa.com
போட்டி 90 நிமிடங்கள் அடைந்த போது கூடுதலாக 10 நிமிடங்கள் விளையாட்டை தொடர நேரம் வழங்கப்பட்டது.
அப்போது கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் 90+2 நிமிடத்தில் அபாரமான கோல் அடித்து பிரேசில் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் ஏற்கனவே ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் செய்த தவறுக்காக மஞ்சள் அட்டை பெற்று இருந்த நிலையில், ஆட்டத்தின் 90+3 நிமிடத்தில் மைதானத்திற்குள் டி-சர்ட்டை கழற்றியதற்காக மஞ்சள் அட்டையையும், சிவப்பு அட்டையும் தண்டனையாக பெற்றார்.
A story in four parts.
This #FIFAWorldCup Group Stage is providing drama right until the very end! pic.twitter.com/v7iviclvYH
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
சூப்பர் 16 சுற்று
குரூப் ஜி பிரிவில் கேமரூன் உடன் பிரேசில் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும், 6 புள்ளிகளுடன் குழுவில் முதல் இடத்தை பிடித்து சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதையடுத்து சுவிட்சர்லாந்து அணியும் 6 புள்ளிகளை பெற்று குழு ஜி பிரிவில் இரண்டாவது அணியாக சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
A man with no regrets 🙌
Vincent Aboubakar 🇨🇲📸#TelegraphFootball #FIFAWorldCup pic.twitter.com/0B1pO4H1dH
— Telegraph Football (@TeleFootball) December 2, 2022