Lic Jeevan Akshay Plan: இந்திய மக்களிடம் பிரபலமாக உள்ள எல்ஐசி எனும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் முதலீடு செய்வதில் மக்கள் பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர், மக்களின் எதிர்கால தேவைக்கு ஏற்ப எல்ஐசி பல பாலிசி திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம் நிலையான வருமானம் கிடைப்பதையோடு முதலீடு செய்யப்படும் பணத்திற்கும் பாதுகாப்பது கிடைக்கிறது. எல்ஐசி வழங்கும் ஒவ்வொரு விதமான திட்டங்களிலும் குறைந்தபட்ச தொகை முதல் அதிகபட்ச தொகையை டெபாசிட் செய்து வைத்துக்கொள்ளலாம். முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வூதியத்திற்கான கார்பஸை உருவாக்குவதற்கு சேமிக்க தொடங்க எல்ஐசி வழிவகை செய்கிறது. தற்போது எல்ஐசி வழங்கும் ஜீவன் அக்ஷய் யோஜனா திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக பெற விரும்பினால் முதலில் இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
ஜீவன் அக்ஷய் திட்டத்தில் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 85 வயதுடையவர்கள் வரை பாலிசியை எடுக்கலாம், நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டிலும் இந்த திட்டத்தை பெறலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்யலாம். கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தில் பங்களிக்கலாம், ஆனால் அந்த இரண்டு நபரும் தனித்தனியாக ரூ.1 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவிற்கு அதிகமாக மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்கும். இதில் பத்துக்கும் மேற்பட்ட வருடாந்திர ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
உதாரணமாக ஜீவன் அக்ஷய் திட்டத்தில் ஒரே நேரத்தில் ஒரு முதலீட்டாளர் ரூ.9,16,200 டெபாசிட் செய்கிறார் என்றால் அவர் மொத்த முதலீட்டின் வருமானமாக மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.6,859 பெறுவார். அதுவே அந்த முதலீட்டாளர் ஆண்டுக்கு ரூ.86,265 பெறுவார், அதுவே அரையாண்டு அடைப்படையில் அந்த முதலீட்டாளருக்கு ரூ.42,008 கிடைக்கும் மற்றும் காலாண்டு அடிப்படையில் ரூ.20,745 கிடைக்கும். மேலும் மாதந்தோறும் ரூ.20,000 ஓய்வூதியமாக பெற விரும்பினால் நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.40 லட்சம் முதலீடு செய்யவேண்டும்.