What to watch on Theatre & OTT: இந்த டிசம்பர் முதல் வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

GOLD (மலையாளம், தமிழ்)

GOLD

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘GOLD’ டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், ஜோஷி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். மொபைல் ஷாப் ஓனரான ஜோஷின் வீட்டு வாசலில் திடீரென்று ஒரு நாள் இரவு மர்மமான ஒரு பொலீரோ லோட் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த காரில் என்ன இருக்கிறது, அது ஜோஷின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகிறது, என்பதுதான் இதன் கதைக்களம்.

DSP (தமிழ்)

DSP

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், புகழ், தீபா, இளவரசு, ஞானசம்பந்தம், ஷிவானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘DSP’. இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கட்டா குஸ்தி (தமிழ்)

கட்டா குஸ்தி

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி, கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Teacher (மலையாளம்)

The Teacher

இயக்குநர் விவேக் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழித் திரைப்படமான ‘The Teacher’ நேற்று (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாலியல் வன்முறைகளைப் பற்றிப் பேசும் இப்படத்தில் அமலா பால் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார்.

HIT: The Second Case (தெலுங்கு)

HIT: The Second Case

சைலேஷ் கொளனு இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அதிவி சேஷ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் நேற்று (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது ஏற்கெனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘HIT: The First Case’ படத்தின் அடுத்த பாகம்.

An Action Hero (இந்தி)

An Action Hero

இந்தி மொழி இயக்குநர் அனிருத் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, ஜெய்தீப் அஹ்லாவத், மிராபெல் ஸ்டூவர்ட், ஹிட்டன் படேல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளத் திரைப்படம் ‘An Action Hero’. ஆக்ஷன், திரில்லர் திரைப்படமான இப்படம் நேற்று (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Devotion (ஆங்கிலம்)

Devotion

ஹாலிவுட் இயக்குநர் ஜே.டி. டில்லார்ட் இயக்கத்தில் ஜொனாதன் மேஜர்ஸ், க்ளென் பவல், கிறிஸ்டினா ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘Devotion’. இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Violent Night (ஆங்கிலம்)

Violent Night

டாமி விர்கோலா இயக்கத்தில் டேவிட் ஹார்பர், ஜான் லெகுயிசாமோ, பெவர்லி டி’ஏஞ்சலோ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘Violent Night’. இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

வதந்தி (Amazon Prime – தமிழ்)

வதந்தி

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வெப்சிரீஸ் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புஷ்கர் – காயத்ரி இந்த வெப்தொடரைத் தயாரித்திருக்கிறார்கள். இது நேற்று (டிசம்பர் 2) ‘Amazon Prime’ ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.

Repeat (Disney Plus Hotstar – தெலுங்கு)

Repeat

இயக்குநர்கள் கிராண்ட் ஆர்ச்சர், ரிச்சர்ட் மில்லர் ஆகியோர் இயக்கத்தில் ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் டிசம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளத் திரைப்படம் ‘Repeat’. இத்திரைப்படத்தில் சார்லோட் ரிச்சி, நினா வாடியா, டாம் இங்கிலாந்து, எல்லிலா-ஜீன் வூட், ஜோசுவா ஃபோர்டு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Qala (Netflix – இந்தி)

Qala

இயக்குநர் அன்விதா தத் குப்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் டிசம்பர் 1ம் தேதி வெளியாகியுள்ளது. திரிப்தி டிம்ரி, ஸ்வஸ்திகா முகர்ஜி, வருண் குரோவர் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Freddy (Disney Plus Hotstar – இந்தி)

freddy

இயக்குநர் ஷஷாங்க் கோஷ் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், அலயா எஃப், கரண் ஏ பண்டிட், சஜ்ஜத் டெலாஃப்ரூஸ், நரேஷ் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘Freddy’. இத்திரைப்படம் ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் டிசம்பர் 2ம் தேதி வெளியாகியுள்ளது.

India Lockdown (Zee5 – இந்தி)

India Lockdown

மதுர் பண்டார்கர் இயக்கத்தில் பிரதீக் பாபர், சாய் தம்ஹங்கர், அஹானா கும்ரா, பிரகாஷ் பெலவாடி, கவித்தா அமர்ஜீத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘India Lockdown’. இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் டிசம்பர் 2ம் தேதி வெளியாகியுள்ளது.

Joy Ride (Apple TV – ஆங்கிலம்)

Joy Ride

இயக்குநர் ஜான் டால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ‘AppleTV’ ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியாகியுள்ளது. ஸ்டீவ் ஜான், பால் வாக்கர், லீலி சோபிஸ்கி, ஜெசிகா போமன், ஜிம் பீவர், ஸ்டூவர்ட் ஸ்டோன், பாசில் வாலஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Sharp Stick (Amazon Prime – ஆங்கிலம்)

Sharp Stick

லீனா டன்ஹாம் இயக்கத்தில் கிறிஸ்டின் ஃப்ரோசெத், ஜான் பெர்ந்தால், லூகா சப்பாட், ஸ்காட் ஸ்பீட்மேன், லீனா டன்ஹாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sharp Stick’. இத்திரைப்படம் கடந்த நவம்பர் 28ம் தேதி ‘Amazon prime’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

திரையரங்கு டு ஓடிடி

லவ் டுடே (Netflix – தமிழ், தெலுங்கு)

‘கோமாளி’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இயக்கி நடித்துள்ள சமகால காதல் திரைப்படம் இது. சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, இவானா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானதை அடுத்து தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

நித்தம் ஒரு வானம் (Netflix – தமிழ், தெலுங்கு)

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி, ரிதுவர்மா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியானதை அடுத்து தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மிரள் (Aha – தமிழ்)

இயக்குநர் எம்.சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘மிரள்’. பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் இதில் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானதை அடுத்து தற்போது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Goodbye (Netflix – இந்தி)

Goodbye

குடும்ப ஃபீல்குட் படமான இதை விகாஸ் பாஹ்ல் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா (அவரது முதல் இந்தித் திரைப்படம்), நீனா குப்தா, சுனில் குரோவர், பாவைல் குலாட்டி, ஆஷிஷ் வித்யார்த்தி, எல்லி அவ்ர்ராம், சாஹில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Monster (Disney Plus Hotstar – மலையாளம்)

Monster

வைசாக் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Disney Plus Hotstar’ ஓடிடி தளத்தில் டிசம்பர் 2ம் தேதி வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.