புதுடில்லி, ஆபாச, ‘வீடியோ’வை வைத்து அமெரிக்க பேராசிரியரை மிரட்டி பணம் பறித்து வந்த புதுடில்லி இளைஞரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
புதுடில்லியின் அசோலா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராகுல் குமார். இவர் தன் காதலியுடன் ஒன்றாக வசித்து வந்தார். ராகுலின் காதலி, அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலையின் பொருளாதாரத்துறை பேராசிரியருடன் சமூக வலைதளம் வாயிலாக நட்பானார். பின் அந்தப் பெண், பேராசிரியருடன் ‘ஆன்லைன் சாட்’ வாயிலாக பேசி வந்தார்.
ஒருகட்டத்தில் பேரா சிரியரை பாலியல் ரீதியாக துாண்டிய அந்த பெண், அவரது ஆபாச வீடியோக்களை பதிவு செய்து கொண்டார். பின் காதலன் ராகுல் குமாருடன் இணைந்து பேராசிரியரை மிரட்டி பணம் பறிக்க துவங்கினார்.
கடந்த ஓராண்டில், இவர்கள் ஆன்லைன் வாயிலாக 38 லட்சம் ரூபாய் வரை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது சம்பந்தமாக அமெரிக்க நீதித்துறையை நாடிய பேராசிரியர் நடந்ததை கூறி புகார் அளித்தார்.
இந்த வழக்கு, எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சி.பி.ஐ.,யை தொடர்பு கொண்ட எப்.பி.ஐ., விபரங்களை கூறியது.
சி.பி.ஐ.,யின் சர்வதேச செயல்பாட்டு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து ராகுல் குமாரை கைது செய்து, அவரது காதலியை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement