கேரளா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மேல்சாந்தி நியமனம் தொடர்பான வழக்கு கேரளா ஐகோர்ட் சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. மேல்சாந்தி பொறுப்புக்கு மலையாள பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பாணைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவசம்போர்டின் அறிவிப்பாணை அரசியல் பிரிவு 14,15,16-க்கு எதிராக இருப்பதாக கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கியது.
