மன்னரை சந்திக்க விரையும் இளவரசர் வில்லியம்: மீண்டும் ஹரி மேகனால் ராஜ குடும்பத்தில் பரபரப்பு


பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் வெளியிட இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர், ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மேகனால் தொடரும் சர்ச்சை

இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்துக்கு சற்றும் தொடர்பில்லாத நடிகையும் விவாகரத்தானவருமான மேகனை திருமணம் செய்த நாளிலிருந்தே ராஜ குடும்பம் பல அவமானங்களை சந்தித்து வருகிறது.

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு ஹரி, மேகன் தம்பதியர் கொடுத்த பேட்டியால் ராஜ குடும்பத்தில் உண்டான கொந்தளிப்பு அடங்கும் முன், மகாராணியார் மறைந்த துயரம் ஆறும் முன், மன்னர் சார்லஸ் பதவியேற்று மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில், மீண்டும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறார்கள் ஹரியும் மேகனும்.

மன்னரை சந்திக்க விரையும் இளவரசர் வில்லியம்: மீண்டும் ஹரி மேகனால் ராஜ குடும்பத்தில் பரபரப்பு | Meghan And Harry Netflix Doc

இம்முறை அவர்கள் வெளியிட இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தொடரும் ராஜ குடும்பத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளதால், அது வெளியாகும் முன்னரே ராஜ குடும்பத்தில் பரபரப்பு துவங்கிவிட்டது.
 

மன்னரை சந்திக்க விரையும் இளவரசர் வில்லியம் 

இந்நிலையில், இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்கள். தொண்டு நிறுவனங்கள் சிலவற்றை சந்திப்பதற்காக அவர்கள் அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில், வேண்டுமென்றே அவர்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக ஹரி, மேகன் தம்பதியர் தங்கள் நெட்ஃப்ளிக்ஸ் தொடரின் ட்ரெய்லரை வெளியிட்டார்கள். 

அந்த ட்ரெய்லரைப் பார்க்கும்போதே அது ராஜ குடும்பத்துக்கு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என்பது தெரியவந்துள்ளது. 

மன்னரை சந்திக்க விரையும் இளவரசர் வில்லியம்: மீண்டும் ஹரி மேகனால் ராஜ குடும்பத்தில் பரபரப்பு | Meghan And Harry Netflix Doc

Getty

ஆகவே, அமெரிக்க சுற்றுப்பயணம் சென்றுள்ள இளவரசர் வில்லியம், விரைந்து பிரித்தானியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவரும், மன்னர் சார்லசும் அந்த நெட்ஃப்ளிக்ஸ் தொடரின் மூன்று எபிசோடுகளையும் பார்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் ராஜ குடும்பத்துக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விரைவான, தக்க பதிலளிப்பதற்கு அவர்கள் தயாராவதற்காக இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.