ஒரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காத நபரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ரயில்வே இருப்புபாதை போலீசார் பறிந்துதுரைத்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் ராஜ்குமார்(20). கட்டுமானப் பணியில் சித்தாளாக வேலை செய்து வந்தார். இவரை கடந்த அக்.29-ம் தேதி மயிலாடுதுறை சித்தர்காடு தெற்குவீதியைச் சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன்(22) என்பவரும், குத்தாலம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவரும் சேர்ந்து மயிலாடுதுறை அருகே மஞ்சளாறு ரயில்வே தன்டவாளத்தில் கொலை செய்து, உடலை போட்டுச் சென்றனர்.
இது குறித்து மயிலாடுதுறை இருப்புப் பாதை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கபிலனுக்கும், பள்ளி மாணவருக்கும் ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளதும், ராஜ்குமாருக்கு மது கொடுத்து அவரையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி, அதற்கு அவர் ஒத்துழைக்காத நிலையில் கொலை செய்ததும் தெரிய வந்ததை அடுத்து சிறையிலடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருக்கும் கபிலன்மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கபிலனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டார். கபிலன் திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.