‛வெண்ணிலா கபடி குழு' புகழ் ஹரி வைரவன் காலமானார்

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்தவர் ஹரி வைரவன். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி விளையாடும் குழுவில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து நான் மகான் அல்ல, குள்ளநரிக் கூட்டம், வெண்ணிலா கபடி குழு 2 ஆகிய படங்களிலும் நடித்தார். அதன்பின் சினிமாவில் அவருக்கு பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். நடக்க கூட சிரமமாக, முகம் எல்லாம் மாறி மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் இரவு 12.15 மணியளவில் இறந்தார்.

இந்த தகவலை நடிகர் அம்பானி சங்கர் தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் “வெண்ணிலா கபடி குழு திரைப்படப்புகழ் நடிகர் “ஹரி வைரவன் ” இன்று காலை 12.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ஹரி வைரவன் உடல் அவரது சொந்த ஊரான மதுரையை அடுத்த கடச்சனேந்தலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கேயே இறுதிச்சடங்கும் நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.