கட்டாக்,:ஒடிசாவைச் சேர்ந்த பழம்பெரும் திரைப்பட நடிகை ஜரானா தாஸ், 77, காலமானார்.
ஒடிசாவின் கட்டாக்கில் வசித்து வந்த பழம்பெரும் நடிகை ஜரானா தாஸ், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலமானார்.
ஜரானா, ௧௫ வயது முதல் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஸ்ரீ ஜெகந்நாத், நாரி, அடின மேகா, அமடா பட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், ஒடியா திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக, மாநில அரசின் ஜெயதேவ் புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.
ஜரானா, கட்டாக் வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராகவும், துார்தர்ஷனில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஒடிசா முன்னாள் முதல்வர் ஹரேகிருஷ்ண மஹ்தாப் குறித்த இவரது ஆவணப்படம், பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
ஜரினாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இவரது இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலர், ஜரானா தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement