லண்டனிலுள்ள இந்த கட்டிடத்தின் பின்னணியில் உலவும் ஆவிக் கதைகள்: பலருக்கும் தெரியாத ஒரு திகில் செய்தி


லண்டனில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மதுபான விடுதியாக இருந்ததாம். அங்குள்ள மர்மம் தெரியாமல், அங்கு சென்ற பலர் உயிருடன் திரும்பியதில்லை என ஒரு செய்தி கூறுகிறது.


மாயமான வழிப்போக்கர்கள்

லண்டனின் Croydon நகரில், George Street மற்றும் High Street சந்திப்பில் ஒரு பழமையான கட்டிடம் அமைந்துள்ளது. அதைக் கடந்து செல்லும் பெரும்பாலானவர்களுக்கு, அந்த கட்டிடத்தின் பின்னால் உள்ள திகில் கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
1880களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து, Croydonஇல் பிறந்த ஊடகவியலாளரான Thomas Frost என்பவர் எழுதியுள்ளதால், அந்த விடயம் உண்மையானதாகத்தான் இருக்கமுடியும் என கருதப்படுகிறது.
அந்த காலத்தில், இதே கட்டிடம் ஒரு மதுபான விடுதியாக இருந்ததாம்.
அங்கு செல்பவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டதால், அந்த ஆவிகள் அங்கேயே இருந்து, பின்னர் வருபவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தனவாம். சொல்லப்போனால், அங்கு செல்லும் பயணிகள் யாரும் திரும்ப வருவதில்லை என கூறப்படுகிறது.

லண்டனிலுள்ள இந்த கட்டிடத்தின் பின்னணியில் உலவும் ஆவிக் கதைகள்: பலருக்கும் தெரியாத ஒரு திகில் செய்தி | Mysterious Stories Ghost Haunting London

@Google Maps


ஆவிகள் உதவியுடன் கொலைகள் செய்த சூனியக்காரி

அதே விடுதியில், Old Mother Hotwater என்று அழைக்கப்பட்ட சூனியக்காரி ஒருத்தியும் வாழ்ந்துவந்தாளாம். அந்த விடுதிக்குச் செல்வோரைக் கொன்று, அவர்களது எலும்புகளை பானையில் போட்டு வேகவைத்துவிடுவாளாம் அவள்.

ஆனால், மறுநாள் யாராவது அங்கு சென்றால், ஒரு ஆள் கொல்லப்படதற்கான எந்த அடையாளத்தையும் அங்கு பார்க்கமுடியாதாம். அவ்வளவு சுத்தமாக இருக்குமாம் அவளது அறை.
தனது அறையிலுள்ள அலமாரி ஒன்றில் சில ஆவிகளை அவள் அடைத்து வைத்திருந்ததாகவும், அந்த ஆவி வேலையாட்கள்தான் அந்த அறையை சுத்தமாக்க உதவுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

லண்டனிலுள்ள இந்த கட்டிடத்தின் பின்னணியில் உலவும் ஆவிக் கதைகள்: பலருக்கும் தெரியாத ஒரு திகில் செய்தி | Mysterious Stories Ghost Haunting London

Getty

சொல்லப்போனால், அந்நாட்களில் Croydonஇல் வாழ்ந்த வீட்டு வேலை செய்யும் பலர், நமக்கும் Old Mother Hotwaterக்கு இருந்ததுபோல் ஒரு அலமாரி இருந்தால் நன்றாக இருக்குமே, என கூறுவதுண்டாம்.
இன்னொரு விடயம் என்னவென்றால், அந்த சூனியக்காரி 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உயிரோடு வருவாள் என நம்பப்படுகிறதாம்.

ஆனால், அந்த பெண் எந்த ஆண்டில் உயிரிழந்தாள் என்பது யாருக்கும் தெரியாததால், அவள் திரும்ப உயிரோடு எப்போது வருவாள் என்பதும் யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.