ஹைதராபாத் சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியை பேராசிரியர் ஒருவரே பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், இந்தி பேராசிரியர் ரவி ரஞ்சன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
63 வயதான ரவி ரஞ்சன் மீது, பாதிக்கப்பட்ட தாய்லாந்து மாணவி இன்று (டிச. 3) காச்சிபௌலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பேராசிரியர் மீது மாணவி கொடுத்த பாலியல் புகார் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் புகழ்வாய்ந்த ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பேராசரியர் மீதே பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்த, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டம் கோரிக்கை வைத்துள்ளனர்.