சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல்


சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


2023ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு

சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு அளிக்க சுவிஸ் பெடரல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பர் மாத இறுதியில் பணவீக்கம் 3 சதவிகிதமாக இருந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியிருந்தார்கள்.

பேச்சுவார்த்தைகளின்போது, ஊழியர் பிரதிநிதிகள் பண வீக்கத்தை ஈடு செய்யும் அளவில் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்கள்.

ஆனால், ஏற்கனவே பட்ஜெட்டில் பற்றாக்குறை இருக்கும் நிலையில், இந்த கோரிக்கை ஏற்புடையது அல்ல என சுவிஸ் நிதி அமைச்சர் Ueli Maurer தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் | Swiss Govt Agreed Pay Rise For Workers

எவ்வளவு ஊதிய உயர்வு?

ஆகவே, சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டில், 2.5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க இருப்பதாக நேற்று, அதாவது, நவம்பர் 2ஆம் திகதி, சுவிஸ் பெடரல் அரசு தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் | Swiss Govt Agreed Pay Rise For Workers

@istock



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.