IRMS 2023: இந்திய ரயில்வேக்கு தனித் தேர்வை UPSC 2023 முதல் நடத்தும் என அறிவிப்பு…

டெல்லி:  இந்திய ரயில்வேக்கான ஐஆர்எம்எஸ்  தனித் தேர்வை  யுபிஎஸ்சி அடுத்த ஆண்டு முதல் (2023)   நடத்த உள்ளது. யுஎஸ்சியால் நடத்தப்படும், ஐஆர்எம்எஸ் இரண்டு அடுக்குத் தேர்வாக இருக்கும் – முதன்மைத் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ரயில்வே பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு 2023 முதல் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே மேலாண்மை சேவை தேர்வு (ஐஆர்எம்எஸ்இ) என்பது இரண்டு அடுக்குத் தேர்வாக இருக்கும் — முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலைத் தொடர்ந்து சோதனைத் தேர்வு நடத்தப்படும் ஐஆர்எம்எஸ் (முதன்மை) எழுத்துத் தேர்வில், தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ஐஆர்எம்எஸ் (முதன்மை) தேர்வு நான்கு தாள்களைக் கொண்டிருக்கும், பாடத் தொகுப்புகளில் வழக்கமான கட்டுரை வகை கேள்விகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து. முதலாவது தேர்வானது, தலா 300 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும், அதாவது, தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் இந்திய மொழிகளில் ஒன்று தாள் ஏ மற்றும் ஆங்கிலத் தேர்வு பி தாள் என இரண்டுத் தேர்வுகள் இடம்பெறும். பிறகு, விருப்ப பாடங்களில் தலா 250 மதிப்பெண்களுக்கு இரண்டு தாள்கள் இருக்கும். இதோடு, 100 மதிப்பெண்களுக்கு தனத்திறன் தேர்வும் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.