சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: “உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ராஜ் பவன் ஊதா நிறத்தில் ஒளிர்கிறது. புதுமை மூலம் அணுகக்கூடிய மற்றும் சமத்துவ உலகை உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உருமாறும் தீர்வுகளில் ஒன்றாகச் செயல்படுவோம்.”
எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்: “முடங்கிவிட மாட்டோம், முயன்று கொண்டே இருப்போம்” என்று வாழ்வில் பலவற்றில் சாதிக்கும், உலகையே மாற்றும் திறன் கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு கிடைத்திட வழிவகுப்பதுடன், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் மனிதம் போற்றி மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்போம், கரம் கொடுப்போம்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: உலக மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று, அனைவராலும் அணுகக்கூடிய சமத்துவமான உலகத்தை உருவாக்கக் கைகோப்போம். இந்நாளில், இயலாமையை வென்றெடுத்து, சாதனை புரிந்த தலைசிறந்த ஆளுமைகளை நினைவு கூறுவோம்!