திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிபள்ளி பகுதியில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பாப்பிரெட்டி பள்ளி பகுதியில் உள்ள பள்ளிக்கூட தெருவில் சோதனை மேற்கொண்டதில், பாண்டியன்(30) என்பவர் தன்னுடைய கடையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பாண்டியனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.