குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடருக்கான மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் 16 புதிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன.
‘வர்த்தக முத்திரைகள் (திருத்தம்) மசோதா’, ‘பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) (திருத்தம்) மசோதா’, ‘பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா’ , ‘தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா’ ஆகியவை அதில் உள்ளன.
2019 டிசம்பர் 9 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெளி விவகார நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதாவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தொடர்களில் அமளியால் விவாதமே நடைபெறவில்லை.
இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரில் விவாதித்து மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
newstm.in