விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையில் சென்ற வாரம் நடைபெற்ற எவிக்ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். மேலும் அந்த வாரத்திற்கான கேப்டனாக அஜீம் தேர்வாகி இருந்தார், அத்துடன் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
இந்நிலையில் தற்போது வரை பிக்பாஸ் சீசன் ஐம்பது நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சீசன் துவங்கியபோது இருந்த சுவாரஸ்யம் போக போக இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக பரபரப்பான போட்டியாளரை களத்தில் இறக்க பிக் பாஸ் யோசித்துக்கொண்டு வருகின்றது.
இதற்கிடையில் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை அரிய மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி சேஃப் கேம் ஆடும் கதிரவன், ரச்சிதா மற்றும் குயின்ஸி ஆகியோரில் ஒருவர் தான் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரம் தனலெட்சுமி மீதும் நெட்டிசன்கள் கோபமாக இருந்ததால் அவர் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அன்அஃபிஷியல் வோட்டிங்கில் குயின்ஸி குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. அதேசமயம் இந்த வாரம் டபுள் ஏவிக்ஷனுக்கு வாய்ப்புள்ளதாக சில தகவல் பரவி வருகிறது. அதன்படி மைனா மற்றும் குயின்சி ஆகிய இருவருமே மிகவும் குறைவான வாக்குகளுடன் வெளியேறுவார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
எனவே யார் இன்று வெளியேறுவார் என்பதை கமல்ஹாசன் அவர்களின் கையில் மட்டுமே உள்ளது. அந்தவகையில் வரும் சனி, ஞாயிறு அன்றே இதற்கான முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.