விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 57 நாட்களை எட்டிவிட்டது. சாந்தி, அசல் கோளார், விஜே மகேஷ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இன்னும் சில வாரங்களில் இறுதிப் போட்டிக்கான ரேஸ் தொடங்க இருக்கும் நிலையில், வைல்டு கார்டு என்டிரியும் அரங்கேற இருக்கிறது. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தாலும், முன்பிருந்த விறுவிறுப்பு இந்த சீசனில் இல்லை என குறைப்பட்டு கொள்கின்றனர் ரசிகர்கள். பிக்பாஸ் சீசன் 1 ஆரம்பித்தபோது, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.
சிலர் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது பிக்பாஸ், அதனால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் நீதிமன்ற படிகளில் ஏறினர். அந்த தடையை எல்லாம் உடைந்தெறிந்துவிட்டு அடுத்தடுத்த சீசன்களில் வெற்றி பயணத்தை தொடர்ந்தது பிக்பாஸ் தமிழ். மேலும், சீசனுக்கு சீசன் புதிய உச்சத்தையும் எட்டிவரும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் ஒரு காரணம். சினிமா, சின்னத்திரை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரபலமாக இருக்கும் முகங்களை பிக்பாஸ் டீம் சரியாக பல்ஸ் பார்த்து களமிறக்கும்.
— Aishwarya (@Aishwar86805754) December 4, 2022
இந்த சீசனுக்கும் அதேபோல் நல்ல போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கு அனுப்பினாலும், முன்பிருந்த சீசன்களைப் போல் இல்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்துள்ளனர். வீட்டிற்குள் நன்றாக விளையாடும் போட்டியாளர்கள் இருந்தாலும், ஏதோ ஒரு சுவாரஸ்யம் குறைவதாக தெரிவித்துள்ளனர். குயின்சியின் எலிமினேஷன் குறித்து கமெண்ட் அடிக்கும்போது, நிகழ்ச்சி குறித்த தங்களின் அபிப்ராயத்தை பதிவிட்டுள்ளனர். அதேநேரத்தில் பிக்பாஸ் சீசன் 6 தமிழை ரசிக்கும் போட்டியாளர்களும் அதிகளவில் இருக்கின்றனர்.