புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y02 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது Y02 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ.
இந்த போன் நீலம் மற்றும் கிரே என இரண்டு வண்ணங்களில் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- ஆக்டா-கோர் மீடியாடெக் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளம்
- 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ்
- 6.51 இன்ச் ஹெச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5000mAh பேட்டரி
- 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- இந்த போனின் விலை ரூ.8,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது
Trendy style and unmatched vibe.
Unveiling the new #vivoY02Buy Now : https://t.co/eDzazkRLla#ItsMyStyle #BuyNow pic.twitter.com/Pziuht03RY
— vivo India (@Vivo_India) December 5, 2022