கேஜிஎஃப் படத்தில் பார்வை திறன் இல்லாதவர் போல் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் கிருஷ்ணா ஜி ராவ் காலமானார்.இவர் இதுவரை 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாகத்தில் கிருஷ்ணா ஜி ராவ் என்ற முதியவர் ஒருவர் கண் பார்வை தெரியாமல் நடித்திருந்தார். அதே போல் இரண்டாம் பாகத்தில் அந்த முதியவர் ” உங்களுக்கு ஒரு யோசனை சொல்லுறேன்.. நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்..” என்று டயலாக் பேசுவார். இந்த டயலாக் தமிழில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இந்நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா ஜீ ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவிற்கு கன்னட திரையுலகம் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.