Thunivu: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட 'துணிவு' படக்குழு: கொண்டாட்டத்தில் ஏகே ரசிகர்கள்.!

அஜித்தின் ‘துணிவு’ பட ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்யும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘வாரிசு’ படமும் வெளியாகி இருப்பதால் இரண்டு தரப்பு ரசிகர்களும் இப்போது சோசியல் மீடியாக்களில் மாஸ் காட்டி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாவது முறையாக அஜித், எச். வினோத், போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்தது. கொரோனா லாக்டவுன், படப்பிடிப்பு தாமதம் உள்ளிட்ட காரணங்களால் பலமுறை தள்ளிப்போனது. அதன்பின்னர் ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் வெளியான ‘வலிமை’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘வலிமை’ படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி இந்த கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘துணிவு’ படத்தில் இணைந்துள்ளது. காதில் கடுக்கன், தாடி, சால்ட் அன்ட் பேப்பர் ஹேர் என அட்டகாசமாக இந்த படத்திற்காக அல்டிமேட்டாக தயாரானார் அஜித். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Captain Miller: குட் நியூஸ் சொன்ன ஜிவி பிரகாஷ்: கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்..!

மேலும் ‘துணிவு’ படம் தொடர்பான பேட்டி மற்றும் இணையத்தில் பரவும் புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது இந்தப்படம் பக்கவான எச். வினோத் பட மெட்டீரியலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Varisu: ‘வாரிசு’ படத்திற்காக படக்குழு போட்டுள்ள மெஹா திட்டம்: வேறலெவல் சம்பவம் கன்பார்ம்.!

‘துணிவு’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்த எந்த அப்டேட்யும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் இந்தப்படத்தை ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழகத்திலும் இதே தேதியில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய்யின் ‘வாரிசு’ படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jigarthanda 2: வேகமெடுக்கும் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா 2’: வெளியான தாறுமாறு அப்டேட்.!

‘துணிவு’ படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘சில்லா சில்லா’ பாடல் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.