
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வங்க தேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற வங்கதேசம் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்வதே இலக்கு என்று களம் இறங்கியது.
ஆனால் வங்க தேசத்தின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டனர் இஷான் கிஷனும், விராட் கோலியும். இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து மாஸ் காட்டினார்.

மறுமுனையில் கிங் கோலி சதம் அடித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இதில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். இன்றைய சதத்துடன் சேர்த்து 72 சதங்களுடன் விராட் கோலி இரண்டாம் கோலி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

71 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். 63 சதங்களுடன் இலங்கை வீரர் குமார் சங்ககாரா நான்காவது இடத்திலும், 62 சதங்களுடன் தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் 5ஆவது இடத்திலும் உள்ளனர்.
newstm.in