ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து, புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி, ‘ஒய்எஸ்ஆர் தெலங்கானா’ என்ற பெயரில் தனியாக கட்சி நடத்தி வருகிறார்.
தெலங்கானா மாநில அரசு பல்வேுறு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இந்த ஆட்சியில் பல்வேறு ஊழல், முறைகேடுக்ள் நடைபெற்று வருவதாகவும், இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பாத யாத்திரை செல்ல உள்ளதாகவும் சில தினங்களுக்கு முன் சர்மிளா ரெட்டி அறிவித்திருந்தார்.
சட்டம் -ஒழங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், அவரது இந்த பாத யாத்திரைக்கு அனுமதி அளிக்க இயலாது என்று தெலங்கானா மாநில அரசு அண்மையில் அறிிவித்திருந்தது. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசின் இந்த முடிவை கண்டித்தும், தமது பாத யாத்திரைக்கு அனுமதி அளிக்க கோரியும் கடந்த இரு தினங்களுக்கு முன், தலைநகர் ஹைதராபாத்தில் சர்மிளா உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்தார்.
கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!
அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்து ஆந்திர முதல்வரும், சர்மிளா ரெட்டியின் சகோதரருமான ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ்ஆர் ரெட்டி கட்சித் தொண்டர்களும் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் தகவலை மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. சர்மிளா ரெட்டியில் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பலவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளது’ எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி கடந்த மாத இறுதியில் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது சர்மிளா அமர்ந்திருந்த போதே காரை வழிமறித்து, சினிமா பாணியில் போலீசார் அதனை தூக்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கலில் முதல்வர் மகள்:
இதனிடையே, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு புதிய கலால் கொள்கையை கொண்டு வந்தது.இதில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகாரை அடித்து, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகளும், எம்.எல்.சியுமான கவிதாவிற்கும் தொடர்பிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது. இதனையடுதது அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் கவிதா வீட்டிற்கு இன்று சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.