தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு

இன்று (18) காலை ஆரம்பமான 2022 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

2894 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற இவ்வருட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு ,சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் மூன்று இலட்சத்து முப்பத்து நாலாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

பரீட்சை காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12:15 மணிக்கு நிறைவடைந்ததாகவும், இதுவரை பரீட்சை முறைகேடுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் கூறினார்.

பரீட்சை தொடர்பில் உளவியல் ரீதியான அழுத்தம் ஏற்படும் வகையில் பிள்ளகைளுடன் நடந்து கொள்ள வேண்டாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.