தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணையை வெளியிட்டது. இந்த அட்டவணையில் குரூப் 1 மற்றும் 2 குறித்த எந்த ஒரு விவரமும் இடம் பெறவில்லை. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் காலிப்பாணியிடங்களின் எண்ணிக்கையும் 1,750 என்ற அளவிலேயே இருந்தது. தேர்வர்கள் பலரும் காலிபணியிடங்களை அதிகரிக்க தேர்வாணையத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 2023-ல் வெளியிடப்படும். முதல்நிலை தேர்வு நவம்பர் மாதமும், முதன்மை தேர்வு ஜூலை 2024-ல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு முதல்நிலை தேர்வு முடிவுகள் 2024 மார்ச் மாதமும், முதன்மை தேர்வு முடிவுகள் 2024 நவம்பர் மாதமும் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவைத்துள்ளது. திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை தேர்வர்கள் கீழே உள்ள நேரடி லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.