விக்ரமனின் அம்பேத்கர் கன்டன்டை கட் செய்த பிக்பாஸ்! கடுப்பான நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினரான விக்ரமன் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். கிடைக்குமிடத்தில் எல்லாம் சமூகநீதி, நேர்மை என கூறிக்கொண்டு தனது அரசியல் கருத்தையும் தூவி வருகிறார். இந்த வாரம் நடைபெற்று வரும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் உயர்நிலைப்பள்ளி மாணவராக விக்ரமன் நடித்திருந்தார். அப்போது சமூக கருத்தை தெரிவிக்கும் வகையில் ஓவியம் வரைய வேண்டும் என்று பிக்பாஸ் சொல்ல, மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவதன் அவலம் குறித்து ஓவியம் வரைந்திருந்தார் விக்ரமன்.
இது ஓடிடியில் 24 மணி நேர ஒளிபரப்பில் மட்டுமே காண்பிக்கப்பட்டது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை. அதேபோல் மற்றொரு டாஸ்க்கில், விக்ரமன் அம்பேத்கருக்கு, 'ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த நாட்டின் நிலையை தலைநிமிர செய்தவர் நீங்கள்' என கடிதம் எழுதுகிறார். இதுவும் ஓடிடியின் 24/7 ஸ்ட்ரீமிங்கில் சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பானது. சமூக கருத்து என்ற டாஸ்க்கில் மிக முக்கியமான இந்த இரண்டு காட்சிகளும் தொலைக்காட்சியில் மட்டும் ஏன் கட் செய்யப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அசீம் போன்ற பண்பற்ற போட்டியாளர்களை சேவ் செய்யும் பிக்பாஸ் விக்ரமன் போன்றோரிடம் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்கிறார் எனவும் பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.