இனிமே இப்படி செஞ்சீங்கன்னா அவ்வளவுதான்: எடப்பாடிக்கு ஓபிஎஸ் வார்னிங்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவராகம் வெடித்த பிறகு, இபிஎஸ் –

ஆகியோர் தனித்தனியாக களமாடி வருகின்றனர். அதிமுக கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முன்னதாக, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வானதுமே ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்தே நீக்கி

உத்தரவிட்டார். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கினார்.

இதனிடையே, சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் தரப்பில் நியமிக்கப்பட்ட கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் பேசும்போது, எடப்பாடி பழனிசாமிக்கு தனிக்கட்சி தொடங்க தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியதுடன், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதை எடப்பாடி பழனிசாமி தடுத்ததாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட

, இதுபோல கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்று கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவதாக புகார் தெரிவித்து அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், “ அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர் நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்தி வருவது ஏன்? கட்சியின் பொறுப்பு எடப்பாடி பழனிசாமி வசம் இருப்பதால், ஓபிஎஸ் இதுபோன்று செயல்படுவது குறித்து சட்ட விளக்கம் அளிக்க வேண்டும். இந்த நோட்டீஸிற்கு உடனடியாக பதிலளிக்காவிட்டால் உறுதியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளித்து ஓபிஎஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுவின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமிக்கும் அதிகாரம் இல்லை. எனவே, ஓபிஎஸ்சுக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ் சட்ட விரோதமானது.

அதிமுக அலுவலக சாவியை ஒப்படைப்பது தொடர்பாக, உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட கருத்துகளை கீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், கட்சி அலுவலகம் மீதான சட்டப்பூர்வமான உரிமைகளை இன்னும் நீதிமன்றம் தீர்மானிக்காதபோது, முகவரியை பயன்படுத்தியது குறித்து தாங்கள் கூறும் குற்றச்சாட்டும் தவறானது. கட்சியின் அலுவலகம், முகவரி, முத்திரை ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் பயன்படுத்தக்கூடாது என்று எந்த தடையும் இல்லை.

மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது செல்லாது. அதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமிதான் கட்சியின் விதிகளுக்கு முற்றிலும் முரணாகவும், கட்சி நிறுவனர் எண்ணங்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார். எனவே, கட்சி பொறுப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக இனிமேலும் இதுபோன்று தேவையற்ற கருத்துகளை தெரிவித்தால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்படும்.” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கு எச்சரிக்கை விடுத்து ஓபிஎஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.