பாரத் பயோடெக்கின் நாசிவழி தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் – எவ்வளவு விலை, எங்கு கிடைக்கும்?

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி வழி கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. தற்போது இதன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் 4ஆம் வாரம் முதல் கோ-வின் தளத்திலும் கிடைக்கும்.
image
மத்திய சுகாதார அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நாசிவழி தடுப்பூசியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொள்ளலாம். iNCOVACC தடுப்பூசிதான் உலகிலேயே முதல் நாசிவழி தடுப்பூசியாகும். கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களும் மூக்கு தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.