செங்கல்பட்டில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 8, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை (டிச.31-ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
இதில், 8, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். முகாமுக்கு வருவோர் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் பங்கேற்கலாம் என்று ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.