விபத்தில் சிக்கிய இளம்பெண்ணை நிர்வாணமாக 4 கி.மீ வரை தரதரவென காரில் இழுத்து சென்ற கொடூரம்..!!

டெல்லியில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 23 வயதான இளம்பெண் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த காருடன் அந்த ஸ்கூட்டி விபத்துக்குள்ளானது.

காரில் வந்த 5 பேரும், காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். அப்போது விபத்தில் சிக்கிய அந்த பெண்ணின் ஆடை அவர்களது காரில் சிக்கியுள்ளது. கார் நிற்காமல் சென்றதால், அந்த பெண் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.

அப்போது, அந்த பெண்ணின் ஆடை கிழிந்தால், அவர் நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்டுள்ளார். இதை பார்த்த ஒருவர் உடனே டெல்லி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதிகாலை சுமார் 3.24 மணிக்கு வந்த இந்த தகவலின் பேரில் போலீசார் இந்த வாகனத்தை பிடிக்க முயற்சித்தது. ஆனால் கார் வேகமாக சென்றதால் வாகனத்தை கண்டுபிடிக்க அவர்களுக்கு சிக்கலானது.

இதையடுத்து சுமார் 4.11 மணிக்கு போலீசாருக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அப்போது, ஒரு இளம்பெண்ணின் உடல் கஞ்சவாலா பகுதியில் நிர்வாணமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றியது.

இதற்கிடையில் சுமார் 3.53 மணிக்கு சுல்தான்புரி என்ற இடத்தில் விபத்துக்குள்ளான ஸ்கூட்டி ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அந்த ஸ்கூட்டி, நிர்வாணமாக கிடந்த அந்த பெண்ணினுடையது என தெரியவந்தது.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி, “அந்த ஸ்கூட்டர் விபத்துக்குள்ளான பிறகு, அந்த பெண்ணின் ஆடை காரில் மாட்டியதால் அவர் 4 கிலோமீட்டர் இழுத்துவரப்பட்டிருக்கிறார். இந்த குற்றத்திற்காக தீபக் கண்ணா, அமித் கண்ணா, கிரிஷன், மித்து, மனோஜ் மிட்டால் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் குடிபோதையில் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், “சிலர் காரில் ஒரு பெண்ணை பல கிலோமீட்டர்களுக்கு போதையில் இழுத்து சென்றதாக தெரிவிக்கின்றனர். இது கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் அபாயமான சம்பவம். நான் டெல்லி காவல்துறைக்கு ஆஜராக சம்மன் அனுப்புகிறேன். உண்மையை அவர்கள் நிச்சயம் வெளிக்கொண்டு வரவேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.