பக்தர்களே அலர்ட்! திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதிக்கு தினம் தினம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக திருப்பதியில் மக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடந்த புரட்டாசி மாதம் அதிக அளவு மக்கள் வரத் தொடங்கியதால் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பின் பேரில் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 விலையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது, இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்-லைனில் (tirupatibalaji.ap.gov.in) பக்கத்தர்கள் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இது தொடர்பாக திருப்தி தேவஸ்தானம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியதாவது., 

” ஜனவரி 12 முதல் 31ம் தேதிவரையிலான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 விலையில் ஜனவரி 9ம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. 

பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளது.

அதேபோல் இம்மாதம் 12ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை திருப்பதி திருமலையில் அறைகள் தேவைப்படும் பக்தர்கள் நாளை காலை 10 மணி முதல் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.