திருவனந்தபுரம்: தமிழ்நாடு, கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கேரள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு, தமிழ்நாடு, கேரளாவில் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும், சுற்றுலா பயணிகளையும் குறி வைத்து தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தீவிரவாதிகள் திட்டமிட்டதை என்ஐஏ போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான வழக்கில் முகமது பொலகோனி என்ற தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கேரள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.