ஸ்ரீநகர்: காஷ்மீரில் செக்டர் பகுதியில் ரோந்து பணியின் போது 3 வீரர்கள் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் செக்டரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் 3 பேர் எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் தவறி விழுந்தனர்.
இதில் சிக்கி அவர் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது. இவர்கள் மூன்று பேரும், இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். பனி மூட்டம் காரணமாக அவர்கள் தவறி பள்ளத் தாக்கில் விழுந்ததாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement