
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.
அந்தவகையில், டிசம்பர் 31-ம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று (ஜன.13-ம் தேதி) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 5,250 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 42,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 74 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.