மக்களாட்சியின் மாண்பை காக்க சக்தியை மீறி செயல்படுவேன்… முதல்வர் சூளுரை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் (நன்றி கலந்த வருத்தம் தெரிவிக்கும் தீர்மானம்) மீது முதல்வர் ஸ்டாலின் இ்ன்று உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

கடந்ச 9 ஆம் தேதி ஆளுநர் உரையின்போது சட்டப்பேரவையில் நிகழ்ந்தவற்றை மீண்டும் அரசியலாக்க விரும்பவில்லை. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அவைக்கு வந்து உரையாற்றிய ஆளுநருக்கு நன்றி.

மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை தமிழ்நாட்டில் அரசு வளரவிடாது; வளரவிடமாட்டோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்பை காக்க எனது சக்தியை மீறி செயல்படுவேன்.

ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களே ஆனாலும் ஆற்றிய பணி அதிகம். தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இந்த 20 மாதங்களில் மொத்தம் 13,428 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளோம். ஒரு கோடி பேருக்கு உதவிகள் வழங்கி உள்ளோம். பல்வேறு திட்டங்கள் தொடர்பாக 2,892 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மக்களின் மனமகிழ்ச்சியே திராவிட மாடலின் நோக்கம்.

அதிமுக ஆட்சியை விட திமுக ஆ்ட்சியில் 4000 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாகவே கடன் வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் 79 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதன் காரணமாகவே தொழில் முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் பயனாகவே கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டில் 14 ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக சொன்னதையும் செய்வோம்… சொல்லாமலும் செய்வோம். அனைத்து நிதிகளையும் மத்திய அரசிடம் கேட்டு கேட்டுதான் பெற வேண்டி உள்ளது.

நாங்கள் மதவாதத்துக்கு எதிரானவர்களே தவிர, மதத்துக்கு அல்ல. நாங்கள் நாத்திகர்கள் என்பதால் கோயில்களை சீரமைக்கவில்லை என்று சிலர் கூறி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை மொத்தம் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கவில்லை. அது என் இயல்பு. நாள்தோறும் உழைத்து கொண்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காக நொடிக்கு நொடிக்கு உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஸ்டாலின் உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.