நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ட்வின் எஞ்சின் ATR 72 ஏர்கிராப்ட் என்ற யெடி ஏர்லைன்ஸ் (Yeti Airlines) விமானம் இன்று காலை 10.33 மணிக்கு புறப்பட்டது. இது போகாரா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த இரு விமான நிலையங்களுக்கும் இடைப்பட்ட பயண நேரம் 25 நிமிடங்கள் மட்டுமே. இந்நிலையில் விமானம் புறப்பட்டு 20 நிமிடங்கள் ஆன நிலையில் சேதி ஆற்றங்கரை பகுதியில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்தில் சிக்கியது.
மளமளவென எரியும் தீ
விபத்து ஏற்பட்ட இடத்தில் தீ மளமளவென எரிந்து வருவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் மொத்தம் 72 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது. அதில் 53 பேர் நேபாள நாட்டை சேர்ந்தவர்கள். 5 பேர் இந்தியர்கள், 5 பேர் ரஷ்யர்கள், ஒருவர் அயர்லாந்து நாட்டவர், 2 கொரியர்கள், ஒருவர் அர்ஜென்டினா, ஒருவர் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர் ஆவர்.
முடியல.. இன்னும் 2 புயல் இருக்கு; பீதியில் உறைந்த மக்கள்!
32 பேர் பலி
அதாவது 15 பேர் வெளிநாட்டு பயணிகள். அவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இந்நிலையில் உயிரிழந்த 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சமீபத்திய நிலவரப்படி 32 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.
விபத்து ஏற்பட்ட வீடியோ
அதுமட்டுமின்றி விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுவது போல் தோன்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன்பிறகே விபத்தில் சிக்கியிருக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது. நேபாள நாட்டின் விமான சேவையை பொறுத்தவரை பாதுகாப்பு மேலாண்மை, ஊழியர்களுக்கான பயிற்சி உள்ளிட்டவை போதிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம்!
நேபாள விமான சேவை
விமானங்களின் தரம் சொல்லி கொள்ளும்படி இல்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விபத்துகள் தொடர் கதையாகி வருகிறது. நேபாள நாட்டை விமான பாதுகாப்பிற்கான கருப்பு பட்டியலில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் சேர்த்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நேபாளத்தில் இருந்து வரும் விமானங்கள் தங்களது வான்வெளிக்குள் பயணிக்கக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது.
தொடரும் விபத்துகள்
நேபாளத்தில் கடந்த மார்ச் 2018ல் நடந்த US-Bangla Airlines விமான விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மார்ச் 2022ல் நடந்த Tara Air விமான விபத்தில் 22 பேர் பலியாகினர். இரண்டு மாதங்களுக்கு தாய் ஏர்வேஸ் விமானம் விபத்தில் சிக்கி 113 பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டில் நடந்த மிக மோசமான விபத்தாக 1992ல் நடந்த பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விபத்து காணப்படுகிறது. இதில் 167 பேர் பலியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.