நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 72 பேருடன் தரையிறங்கிய எட்டி ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
64 பேர்கள் வரையில்
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறித்த விபத்தில் சிக்கி 64 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@getty
காட்மாண்டுவில் இருந்து குறித்த விமானமானது பொக்காரா சென்றதாக தெரிய வந்துள்ளது. விபத்தின் போது விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதாக கூறப்படுகிறது.
விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
@getty
10 வெளிநாட்டவர்கள்
விமானத்தில் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷ்யர்கள் ஒரு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள், அர்ஜென்டினா, பிரான்ஸ் தலா ஒருவர் என மொத்தம் 67 பேர் பயணித்ததாக விமான நிலைய ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது.
@getty
கடந்த 2000 ஆண்டுக்கு பின்னர் நேபாளத்தில் விமானம் அல்லது ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி சுமார் 309 பேர்கள் வரையில் இறந்துள்ளனர்.
காலநிலை திடீரென்று மாறுவதும், பயணத்திற்கு சிக்கலை ஏற்படுத்துவதும் விபத்துகளுக்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
மேலும், பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு, நேபாள விமானங்களை ஐரோப்பிய ஒன்றியம் அதன் வான்வெளியில் இருந்து 2013 முதல் தடை செய்துள்ளது.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் இரண்டு பச்சிளம் குழந்தைகளுடன் மொத்தம் 68 பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.