மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில், 28 காளைகளை அடக்கி ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
17 காளைகள் அடிக்க அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் இரண்டாவது இடத்தையும், 14 காளைகளை பிடித்து விளாங்குடியை சேர்ந்த பாலாஜி என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
11 சுற்றுகளில் சுமார் 730 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக அரசு சார்பில் கார் வழங்கப்படுகிறது. சிறந்த காளைகளுக்கு பசுமாடுகள் மற்றும் டூ வீலர் வழங்கப்படுகிறது.
இரண்டாவது இடத்தை பிடித்த மாடுபிடி வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. மூன்றாவது வீரருக்கு பசுமாடு வழங்கப்படுகிறது.
மேலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் தங்கக் காசுகள், வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
அவனியாபுரம் வரலாற்றிலேயே அதிக காளைகளைப் பிடித்த நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் 28 காளைகளை அடக்கிய விஜய். இவர் மின்வாரிய ஹேங்மேனாக பணிபுரிந்துவருகிறார்.
newstm.in