ஐதராபாத் எட்டாம் நிஜாம் துருக்கியில் காலமானார்| The eighth Nizam of Hyderabad died in Turkey

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்தான்புல்: ஐதராபாத்தின் எட்டாவது நிஜாம் வயது முதிர்வு காரணமாக துருக்கியில் காலமானார்.

latest tamil news

தெலங்கானா மாநிலம் தலைநகர் ஐ தராபாத்தை ஆட்சி செய்தவர்கள் நிஜாம் மன்னர்கள். சுதந்திர இந்தியாவிற்கு பின்னர் ஐதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் நிஜாம் வம்சாவழியினர். வெளிநாடுகளில் வசித்து வந்தனர். நிஜாம் வழியில் வந்தவர்களில் எட்டாவது நிஜாம் முகரம் ஜா என்பவராவார். 1933ம் ஆண்டில் பிறந்த இவர் தற்போது துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

latest tamil news

இந்நிலையில் கடந்த 14 ம் தேதி தன்னுடைய 89 வது வயதில் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது கடைசி ஆசையான தன்னுடைய உடலை ஐ தராபாத்தில் அடக்கம் செய்ய விரும்பியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினர் கூறுகையில் மறைந்த நிஜாமின் உடல் ஐ தராபாத்தில் உள்ள செளமஹல்லா அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டு முறைப்படியான சடங்குகள் செய்த பின்னர் ஆசாப் ஜாஹி குடும்பத்தின் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.