புதுச்சேரி – சென்னை இ.சி.ஆரில் மீண்டும் ஏ.சி., பஸ் இயக்கம்| Puducherry-Chennai ECR resumes AC bus operation

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுச்சேரி: புதுச்சேரி – சென்னை இ.சி.ஆர்., வழித்தடத்தில் பி.ஆர்.டி.சி. வால்வோ ஏ.சி., பஸ்கள் நேற்றுமுதல் இயங்க துவங்கியது.

புதுச்சேரி சென்னை இடையே இ.சி.ஆர்., வழித்தடத்தில் இயக்கப் பட்ட பி.ஆர்.டி.சி., வால்வோ பஸ்கள் கொரோனா பரவல் காரண மாக கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
கொரோனா பரவலுக்கு பின்பு தனியார் மற்றும் தமிழக பஸ்கள் முழுமையாக இயங்க துவங்கியும், பி.ஆர்.டி.சி.யின் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது.

latest tamil news

இந்நிலையில் 3 ஆண்டு களுக்கு பிறகு தற்போது மீண்டும் புதுச்சேரி – சென்னை இ.சி.ஆர்., வழித்தடத்தில் பி.ஆர்.டி.சி., வால்வோ பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் தினசரி 2 வால்வோ ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில், முன்பதிவு வசதி இல்லாத வால்வோ ஏ.சி., பஸ் புதுச்சேரிபஸ்நிலையத்தில் காலை 6:30 மணிக்கும், மதியம் 2:30 மணிக்கும் புறப்படுகிறது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலை 10:30 மணிக்கும், மாலை 6:30 மணிக்கு புறப்படுகிறது. முன்பதிவு செய்யப்படும் வால்வோபஸ் புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து காலை 5:30 மணிக்கும், மதியம் 1:30 மணிக்கும் புறப்படுகிறது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலை 9:30 மணிக்கும், மாலை 5:30 மணிக்கும் புறப்படுகிறது. இதற்கான டிக்கெட் கட்டணம் ரூ. 263 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை புதிய பஸ் நிலைய பி.ஆர்.டி.சி., டிக்கெட் கவுன்டர்களிலும், பஸ் இந்தியா ஆப் மூலம் முன்திவு செய்து கொள்ளலாம்.

காரைக்காலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக வரும் 18ம் தேதி புதுச்சேரியில் காரைக்காலுக்கு காலை 5:30 மணிக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.