சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப தென்மாவட்டங்களில் மட்டும் 1187 சிறப்பு பேருந்துகள் ‘ரெடி’யாக இருப்பதாகவும், மொத்தம் 3287 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 3 நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பவும்இன்றுமுதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 18-ந்தேதி வரை இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி, நாகர்கோவில், […]
