`UPSC தேர்வில் நான் வெற்றிபெற, எனக்கு உதவியது இதுதான்’-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“மாணவர்கள் தேர்வுத்தாளைப் பார்த்ததும் புன்னகைக்க வேண்டும்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய Exam Warriors என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை (தேர்வு வீரர்கள்) தமிநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 17) காலை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நம் பிரதமர் வித்தியாசமான மனிதர். கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து அனைத்து விதமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். பாதுகாப்பாக வளர்ந்து வரவில்லை. நம் நாடு யாரால் ஆட்சி செய்யப்படுகிறது? என்னாலோ அல்லது என்னைப்போல் பதவியில் இருப்பவர்களாலோ அல்ல. உங்களைப் போன்ற மாணவர்கள், இளைஞர்களால்தான். நீங்கள், பாறை போன்றவர்கள்.
image
உங்களது திறமையை வெளிக்காட்டுவதன் மூலம்தான் அழகான சிற்பமாக மாறுவீர்கள். வெளியில் இருந்து பார்த்தால் கரடுமுரடாகத்தான் இருக்கும். ஒருமுறை அது வெளிப்பட்டால்தான், அதன் மதிப்பு தெரியும். உங்களை நீங்கள் நம்புங்கள். ஆலமர விதை சிறியதுதான். ஆனால், அதுதான் பெரிய விருட்சமாக வளரும்.
அதுபோல், நீங்களும் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு வளர வேண்டும். ஒரு இளம் ஆண் அல்லது பெண், வாழ்வில் முன்னேறாமல் இருப்பது அவர்களின் இழப்பு மட்டுமல்ல, நாட்டின் இழப்பு. நீங்கள் உங்களின் தகுதியை உணர்ந்து வளர்ந்து வரவில்லை என்றால், அது உங்களுக்கும் இழப்பு. உங்கள் பெற்றோருக்கும் இழப்பு. இந்த நாட்டுக்கும் இழப்பு.
image
தேர்வு மட்டும் எதையும் இறுதி செய்வது இல்லை. தேர்வு பயத்தால் பதற்றம், மன அழுத்தம் பாதிக்கப்பட்டு மாணவர்கள் தற்கொலைக்கு முயல்கிறார்கள். அது மிகவும் கொடுமையானது. ஆகையால், நீங்கள் தேர்வுத்தாளைப் பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால், அதிகம் புன்னகை செய்யுங்கள். யுபிஎஸ்சி தேர்வில் அதுதான் எனக்கு உதவியது” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.