நடிகர் சோனு சூட் கொரோனா முதல் அலையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததன் மூலம், மக்கள் மத்தியில் ஹீரோவானார். சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு வாகன வசதி, உயிர் காக்கும் ஆக்ஸிஜன் உட்பட அனைத்து உதவிகளையும் சோனு சூட் செய்துகொடுத்தார்.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் மயங்கி விழுந்த ஒருவரின் உயிரை நடிகர் சோனு சூட் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இமிகிரேஷன் கவுண்டரில் சுயநினைவை இழந்த அந்த நபரின் நெஞ்சில் கை வைத்து சிபிஆர் (CPR)கொடுத்துள்ளார் சோனு சூட். சிறிது நேரத்தில் அந்த நபருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. சோனுவிற்கு ஏர்போர்ட் அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.