ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை பகுதிக்கு அருகில் ஆதியூர் எனும் கிராமம் அமைந்து இருக்கிறது. இந்த கிராமத்தில் ராஜமணி எனும் மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது நூறாவது வயது பிறந்த நாளை தன்னுடைய 52 பேத்தி பேரன்களுடன் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார்.
அதாவது, இந்த மூதாட்டிக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களின் மூலம் கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி பேரன் என்று மொத்தம் 52 வாரிசுகள் இருக்கின்றன. 50 வயது வரை வாழ்வதே இக்கால கட்டத்தில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆரோக்கியத்துடன் ராஜாமணி 100 வயது வரை வாழ்ந்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஐந்து தலைமுறையை கடந்து வாழ்ந்து வரும் ராஜா மணிக்கு இறைவன் கொடுத்த வரம் தான் இந்த ஆயுள்.
எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்தால் 100 வயது வரை யாராக இருந்தாலும் ஆரோக்கியமாக வாழலாம் என்று டிப்ஸ் கொடுக்கிறார் ராஜாமணி. அவரது, புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரிடமும் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.